"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

பரத் நடிக்கும் "எங்க வீட்டு பிள்ளை"


1949 ஆம் ஆண்டில் சௌகார் படத்தில் துவங்கி தொடர்ந்து தமிழில் மிஸ்ஸியம்மா, பாதாளபைரவி, மாயாபஜார், எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, தெலுங்கில் என்.டி.ராமாராவ் நடித்த பெள்ளி சேசி சூடு, அப்பு சேசி பப்பு கூடு, பாதாளபைரவி, என்.டி.ராமாராவ், நாகேஸ்வராவ் நடித்த குண்டம்மா கதா, கன்னடத்தில் ராஜ்குமார் நடித்த மதுவே மாடிநோடு, சத்ய ஹரிசம்திரா, ஹிந்தியில் திலிப்குமார் நடித்த ராம் அவுர் ஷ்யாம், லஷ்மி நடித்த ஜூலி, மலையாளத்தில் பிரேம்நசிர் நடித்த லைலா மஜ்னு, சத்யன் நடித்த பாயே ஜாதகம் உள்ளிட்ட 50_க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களையும் தொடர்ந்து சந்தமாமா விஜய கம்பைன்ஸ் சார்பில் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமல்ஹாசன் நடித்த நம்மவர் படங்கள் தயாரித்த நிறுவனம் தனது 60 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.



விஜயா வாகினி புரொக்ஷன்ஸ் சார்பில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான புதிய கதையமைப்பினர் மீண்டும் எங்க வீட்டு பிள்ளை என்ற அதே பெயரில் புதியபடம் ஒன்றை மிக பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது.

பரத் நடிக்கும் இப்படத்தில் முக்கிய பிரதான வேடத்தில் பிரபு நடிக்க இவர்களுடன் விவேக், சம்பத்ராஜ், லிவிங்ஸ்டன், பிரகதி, ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பரத் ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் இப்படத்தின் அறிமுமாகிறார்கள்.

இப்படத்தினை சுந்தர்.சி நடித்துள்ள வீராப்பு, ஐந்தாம்படை ஆகிய படங்களை இயக்கிய பத்ரி கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.

ஆத்மார்த்தமாக பழகிய இரண்டு நண்பர்களை, ஒரு தவறான மனிதனின் வழிகாட்டுதலின் எதிரிகளாகி ஒருவரை ஒருவர் பழி தீர்த்து கொள்ள துடிக்கின்றனர். இதில் ஒருவரின் மகனான கதாநாயகன் பிரிந்த நண்பர்களை எப்படி இணைத்து வைக்கிறான் என்பததை காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து சொல்லும் கதைதான் எங்க வீட்டு பிள்ளை. இம்மாதம் சென்னையில் துவங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஹைதராபாத், கொடைக்கானல், மலேசியா, சிங்கப்பூர் பகுதிகளில் நடைபெறுகிறது.

ஒளிப்பதிவு செல்லதுரை (கே.வி.ஆனந்திடம் சிவாஜி, முதல்வன், செல்லமே, விரும்புகிறேன், நேருக்கு நேர், இந்தியன், காக்கி, தோஷ், லெஜண்ட் ஆம் பகத்சிங், நாயக் உள்ளிட்ட 25 படங்களுக்கு 13_ம் வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்). வசனம் பி.செந்தில்குமரன், சுப்பிரமணியன், இசை பாரிஜாம் படபுகழ் தரண், கலை ஜனா, எடிட்டிங் மு.காசிவிஸ்வநாதன், நடனம் தினேஷ், கல்யாண், ஹோபி, சண்டைப்பயிற்சி தளபதி தினேஷ் மக்கள் தொடர்பு நிகில், தயாரிப்பு மேற்பார்வை பாலகோபி, தயாரிப்பு விஜயா வாகினி புரெடக்ஷன்ஸ், கதை, திரைக்கதை, டைரக்ஷன் பத்ரி.



©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections