பட்டு வண்ண ரோசாவாம் புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கும் ஒரு படத்துக்கு, "பட்டு வண்ண ரோசாவாம்" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.சுதந்திரமாக வாழ விரும்பும் மூன்று பெண்கள். வெவ்வேறு வழிகளில் வரும் அவர்களை, ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறான், கதாநாயகன். இவர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை. புதுமுகங்கள் கோவூர் ரவி-தேவி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, உதயா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்: எஸ்.எஸ்.செந்தில்குமார். கதாநாயகனாக நடிக்கும் கோவூர் ரவியே இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு கும்பகோணம், குன்னூர் மற்றும் ஐதராபாத்தில் 25 நாட்கள் நடைபெற்றது.குமுதா மூவீஸ் சார்பில் படம் தயாராகி வருகிறது. ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |