நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து வந்த மர்மயோகி திரைப்படம் கைவிடப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து வந்த மர்மயோகி திரைப்படம் கைவிடப்பட்டுள்ளது. கமலின் ராஜ்கமல் நிறுவனமும் பிரமிட் சாய்மீரா நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க ஒப்பந்தமாகி இருந்தது. ரூ.150 கோடி செலவில் பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்படவிருப்பதாக பிரமிட் நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது. படத்தில் கமலுடன் த்ரிஷா, ஸ்ரேயா, ஹேமமாலினி, ஷோபனா, முமைத்கான் ஆகிய நடிகைகளும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். குசேலன் படத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நிதி நெருக்கடியில் இருக்கும் பிரமிட் நிறுவனம், மர்மயோகி படத்தை எடுக்க முடியாமல் தவித்தது. இதனால் சூட்டிங் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மர்மயோகி பட திட்டத்தை கைவிட்டு விட்டதாக பிரமிட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை பிரமிட் சாய்மீரா குரூப் தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன், "தலைவன் இருக்கின்றான்" என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |