"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

"மந்த்ரா" - நடிகை பெயரல்ல !.படத்தின் பெயர்


கே.வி.எல். இன்னோவேட்டிவ்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் மந்த்ரா. காதல் அழிவதில்லை படத்தில் டி,ராஜேந்தரால் அறிமுகம் செய்யப்பட்டு தொடர்ந்து காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு போன்ற படங்களில் நடித்த சார்மி இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் மட்டுமின்றி, மாறுபட்ட தோற்றத்திலும் நடிக்கிறார். தெலுங்குப்பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் சிவாஜி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இளமை துள்ளும் காட்சிகளுடன் மர்மம் திகில் கலந்த கதை அம்சம் கொண்ட இப்படத்தை ஓஷோ துளசிராம் இயக்குகிறார்.அதென்ன மந்த்ரா?. "இது வழக்கமான படமல்ல, தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் படு பயங்கரமான திகில் படம். ஆங்கிலப்படங்களை மிஞ்சும் வகையில் படமாக்கி இருக்கிறோம். கண்ணால் காண்பது எல்லாம் உண்மை இல்லை. கண்ணால் பார்க்க முடியாதது எல்லாம் பொய்யும் இல்லை. நாமெல்லாம் கண்ணால் பார்த்திராத ஒரு உண்மையைப் பற்றிய படம்தான் இது.'' என்கிறார் இயக்குநர்.














©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections