"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தமிழ் சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு தடை


தமிழ் திரைப்படங்களில் நடிக்க நடிகை நயன்தாராவுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளரிடம் இருந்து நடிகர் - நடிகைகள் முன்பணம் வாங்கியிருந்தால் சம்பந்தப்பட்ட படத்தில் ஒருநாளாவது நடித்திருந்தால் முன்பணத்தை திருப்பித் தர வேண்டியதில்லை. ஆனால் ஒரு நாள் கூட நடிக்காதபட்சத்தில் முன்பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோசிடம் வாங்கிய முன்தொகையை திருப்பித் தர இரு மாதங்களுக்கு முன் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நயன்தாரா பணத்தை திருப்பித் தர மறுத்து விட்டார். இதையடுத்து நயன்தாராவுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரோ... பணத்தை திருப்பித் தர முடியாது என்று தகவல் அனுப்பியிருக்கிறார். இதனால் சங்க விதிமுறைகளை மீறிய நயன்தாராவை இனிமேல் தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது. மற்ற மொழி படங்களில் நடிக்க வைக்கக் கூடாது என்று அந்தந்த தயாரிப்பாளர் சங்களில் பேசுவது என்றும் இதனை அனைத்து தயாரிப்பாளர்களும் கடைபிடிக்க வேண்டும், கூறப்பட்டுள்ளது.









©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections