எனது உடலை இளமையாக வைத்திருக்க முயலுகிறேன் - கரீனா பாலிவுட் நடிகை கரீனா, தான் எப்போதும் இளமையாக இருக்க விரும்புவதாக கூறியுள்ளார். படு தீவிரமாக உடற்பயிற்சி செய்து தன் உடல் எடையை குறைத்துக் கொண்ட கரீனா, ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் தீவிரமாக யோகா செய்கிறேன். அதன் சக்தி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதை நான் ரசிக்கிறேன், மதிக்கிறேன், வணங்குகிறேன். எனது உடல் பொலிவுக்கு குறிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. நிறைய காய்கறிகளை சாப்பிடுகிறேன். நிறைய தண்ணீர் குடிக்கிறேன். இந்த நாட்டின் இளம் பெண்களில் நானும் ஒருத்தி. எனவே இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் எடுத்துக் காட்டாக விளங்க வேண்டுமானால், நாம் முதலில் இளமையாக இருக்க வேண்டும். அதனால்தான் எனது உடலை இளமையாக வைத்திருக்க முயலுகிறேன் என்று கூறியுள்ளார். ![]() ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |