பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு ரூ.75 லட்சம் செலவில் உடை அலங்காரம் பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு ரூ.75 லட்சம் செலவில் உடை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. முகேஷ் பட் தயாரிக்கும் ராஸ் படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படத்தில் நடிக்கும்போது அணிவதற்காக அவருக்கு 110 உடைகள் வாங்கப்பட்டுள்ளனவாம். இதுபற்றி முகேஷ் பட் கூறுகையில், கங்கனாவின் தோற்றம் கிளாமராக இருக்க வேண்டும் என்பதற்காக விலைஉயர்ந்த காஸ்ட்யூம்கள் பயன்படுத்தப்படுகிறது. ரூ.25 கோடி செலவில் தயாரிக்கப்படும் இப்படத்தில் கங்கனாவின் ஆடைகளுக்கு மட்டும் ரூ.75 லட்சம் செலவிடப்படுகிறது, என்றார். உடை அலங்காரத்துக்காக ரூ.75 லட்சம் செலவிடப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்த படத்தில்தான் கங்கானா அரை நிர்வாண கோலத்தில் நடித்திருப்பதாகவும், அந்த காட்சிகளுக்கு சென்சார் போர்டு கத்தரி போட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ![]() ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |