"ப்ருத்விராஜன்" - சிறப்பு புகைப்படங்கள் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() 1959-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி பிறந்வர் இயக்குனர் ஆர். பாண்டியராஜன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.வயது 50 என்றால் யாராவது நம்புவார்களா?. தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தா தூயவன் அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்து தனது திரையுலக வாழ்வினைத் துவங்கி, பின்னர், இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களிடம் அலுவலக உதவியாளராகச் சேர்ந்து, அவர் இயக்கிய "மெளன கீதங்கள்", "அந்த ஏழு நாட்கள்", "தூறல் நின்னு போச்சு", "விடியும் வரை காத்திரு", "இன்று போய் நாளை வா" படங்களில் உதவி இயக்குனராய் பணிபுரிந்து, அவர் இயக்கிய "டார்லிங்...டார்லிங்" படத்தில் இணை இயக்குனராய் உயர்ந்து, அவரின் "முந்தானை முடிச்சு" படத்தின் மூலக்கதை திரைக்கதை உருவாக்கம்வரை இணை இயக்குனராய் உடனிருந்து, பின்னர் 1985-ஆம் ஆண்டு வெளிவந்த பிரபு, ரேவதி நடித்த "கன்னிராசி" படம் மூலம் வெற்றிப்பட கதை, திரைக்கதை, வசன இயக்குனராய் தமிழகத்துக்கு அறிமுகமானார். அடுத்து அதே 1985-ஆம் ஆண்டு ,டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி வெளியான 'ஆண்பாவம்' திரைப்படத்தில் நகைச்சுவை நாயகனாய் தன்னை வெளிப்படுத்தி அன்று முதல் இன்று வரை வெற்றிகரமான நடிகர் இயக்குனராய் வலம் வரும் ஆர். பாண்டியராஜனின் மனைவி பெயர் வாசுகி பாண்டியராஜன், மாமனார் புகழ்பெற்ற கவிஞர் அவினாசிமணி, மகன்கள் பல்லவராஜன், ப்ருத்விராஜன், பிரேமராஜன். ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |