எந்திரன் படத்தில் கருணாஸ், சந்தானம் நடிக்கின்றனர் "எந்திரன்" படப்பிடிப்பு திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னையில் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடையாறு, தண்டையார்பேட்டை, கிழக்கு கடற்கரைசாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது.தினமும் வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பு நடைபெறும் தகவல் அறிந்து ரசிகர்கள் திரளும் முன் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது. அழகுநிலையம், நகைக்கடை போன்றவற்றில் காட்சிகளை எடுக்கின்றனர். இம்மாதம் இறுதிவரை சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. அதன் பிறகு ஆணைமலையில் உள்ள `டாப் ஸ்லிப்'புக்கு படப்பிடிப்பை மாற்றுகின்றனர். இங்கு ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகளை படமாக்குகிறார் இயக்குனர் ஷங்கர். `டாப் ஸ்லிப்' யானைகள் மற்றும் பறவைகள் சரணாலயம் ஆகும். அவற்றை காட்சியில் சேர்க்கின்றனர். எந்திரன் காமெடி கலந்து ஆக்ஷன் படமாக உருவாகிறது. ஏற்கனவே ரோபோவாக நடிக்கும் ரஜினிக்கு சலூனில் முடிவெட்டப்படும் காட்சி நகைச்சுவையாக படமாக்கப்பட்டது. கருணாஸ் இப்படத்தில் காமெடி கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது. சந்தானமும் இதில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில காமெடி நடிகர்களுடன் பேசி வருகின்றனர். ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |