"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தமிழ்த் திரைத்துறையில் பெண் இயக்குநர்கள்




தமிழ்த் திரைத்துறையில் அரிதாகவே பெண் இயக்குநர்கள் தோன்றுகிறார்கள். சமீபத்தில் ‘வல்லமை தாராயோ’ ப்ரியா வந்தார். ஓரளவுக்கு ஜெயித்தார். அடுத்ததாகத் தற்போது அனிதா உதீப் வந்திருக்கிறார், குளிர் 100 திரைப்படம் மூலம். அனிதா உதீப் அமெரிக்காவில் சினிமா பற்றி கற்றவர். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டேக்கன் திரைப்படத்தில் பணியாற்றியவர். புதுமுகங்களான சஞ்சீவ், சபேஷ் கார்த்திக், அபிஷேக் நித்திஷ், சயத் ஆகியோருடன் நாயகியாக ரியா நடித்திருக்கிறார். புதுமுகங்களை வைத்து ரிஸ்க் எடுக்கும் தைரியம் புதுமுக இயக்குநரான அனிதா உதீப்புக்கு வந்தது ஆச்சரியம்தான். "பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் ப்ளஸ் ஒரு பெண் வாழ்க்கையில் நடக்கும் நட்பு, காதல், மோதல் தான் படம். இந்தக்காலத்து, இந்த வயது பசங்க சூடாகவும் இருப்பார்கள். குளிர்ச்சியாகவும் இருப்பார்கள். அதான் குளிர் 100” என்று அழகாக தலைப்புக்கு காரணம் சொல்கிறார் அனிதா உதீப். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என்று எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக் கொண்டிருக்கும் அனிதா உதீப்பை பாராட்டியே ஆகவேண்டும்.



©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections