"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

2008-ம் ஆண்டு திரையுலகில் முக்கிய நிகழ்வுகள்


* இலங்கை தமிழர் படு கொலையை கண்டித்து ரஜினி, கமல் பங்கேற்ற நடிகர், நடிகையர் உண்ணாவிரதம்.



* அமெரிக்காவுக்கு ஆள் கடத்த முயன்றதாக நடிகை புளோரா கைது.

* கணவர் விஷால் அகர்வாலிடம் விவாகரத்து கேட்டு மீரா வாசுதேவன் வழக்கு.

* நடிகர் ராஜசேகர் சிரஞ்சீவி ரசிகர்களால் தாக்கப்பட்டார்.

* நடிகர் குணால் தூக்கில் தொங்கி தற்கொலை

* இசையமைப் பாளர் யுவன் சங்கர் ராஜா- சுஜாயா தம்பதி விவாகரத்து.



* சினிமா வசனகர்த்தா சுஜாதா மரணம்.



* பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் ரகுவரன் மரணம்.

* தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ராம நாராயணன் அணி வெற்றி.

* `குசேலன்' பட நஷ்டத்தை ஈடுகட்ட தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி.

* வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் மரணம்.

* காமெடி நடிகர் வடிவேலு வீடு மீது தாக்குதல்

* இலங்கை தமிழர் படு கொலையை கண்டித்து ராமேசு வரத்தில் திரையுலகினர் ஊர்வலம்.

* பழம் பெரும் நடிகர் பூர்ணம் விசுவநாதன், டைரக்டர் ஸ்ரீதர் மரணம்.

* இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர்கள் சீமான், அமீர் கைது.

* இலங்கை இன படு கொலையை கண்டித்து ரசிகர்களுடன் விஜய் உண்ணாவிரதம்.

* பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியார் மரணம்.

* நடிகர் சோபன்பாபு, பழம்பெரும் நடிகை எஸ். முத்துலட்சுமி மரணம் அடைந்தனர்.

* ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்கும் கன்னட வெறியர்களை கண்டித்து ரஜினி, கமல் பங்கேற்ற உண்ணாவிரதம்.

* தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், அமிதாப்பச்சன், மம்முட்டி பங்கேற்பு.

* தசாவதாரம் படம் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக இந்து முன்னணி வழக்கு.

* பழம்பெரும் நடிகை டி.பி. முத்துலட்சுமி, தேனி குஞ்சராம்பாள், ஒளிப்பதிவாளர் சி.ஜே. ரவி மரணம்.

* `சர்வம்' படப் பிடிப்பில் லிப்ட் அறுந்து விழுந்து 2 பேர் பலி.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections