2008-ம் ஆண்டு கனவுக்கன்னி நயன்தாரா ![]() ஐயா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நயன்தாரா இப்போது தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாக மிளிறுகிறார். முதல் படத்தில் அடக்க ஒடுக்கமாக வந்த இவர் ரஜினியின் சந்திரமுகி மூலம் பிரபலமானார். சில்மிஷ நாயகன் சிம்புவுடன் வல்லவன் படத்தில் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திணறடித்தார். அவருடன் காதல் விவகாரத்தில் சிக்கியதால் பரபரப்பாக பேசப்பட்டார். பில்லா, சத்யம் படங்களில் எல்லைமீறி கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். இவ்வருடம் அதிக படங்களில் நடித்து முதலிடத்தில் உள்ளார். தனுசுடன் நடித்த யாரடி நீ மோகினி ஹிட் படமானது. அவர் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவினாலும் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக திகழ்கிறார். இவர் இருந்தால் படம் ஓடும் என்ற நம்பிக்கையையும் தயாரிப்பாளர்களிடம் ஆழமாக பதிய வைத்துள்ளார். தெலுங்கிலும் பட்டையை கிளப்புகிறார் நயன்தாராவுக்கு போட்டியான திரிஷாவுக்கு பீமா, அபியும் நானும் படங்கள் வந்தன. காதல், டூயட் என கேரக்டர்கள் பண்ணிய அவருக்கு அபியும் நானும் நடிப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பளித்தது. தெலுங்கிலும் கொடிகட்டி பறக்கிறார் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி மூலம் தமிழுக்கு அறிமுகமான அசின் குறுகிய காலத்திலேயே உச்சத்துக்கு போனார். கஜினி, போக்கிரி ஹிட் படங்களாக அமைந்தன. இவ்வருடம் கமலுடன் ஜோடியான அசின் தசாவதாரம் ரீலிசாகி அவரை மேலும் ஒருபடி உயர்த்தியது. ஆனால், மேற்கொண்டு தமிழ் படங்களில் நடிக்காமல் இந்திக்கு தாவினார். அமீர்கான் ஜோடியாக கஜினியின் இந்தி ரீமேக்கில் நடித்து ஒரு படத்திலேயே இந்தி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்துள்ளது. அடுத்து லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் நடிக்கிறார். ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |