"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

2008-ம் ஆண்டு திரைப்படத்தில் முதலிடம் பெற்றவர்கள்






பரத் நான்கு படங்களில் நடித்து அதிக படங்கள் ரிலீஸ் செய்த `ஹீரோவாக உள்ளார். பழனி, நேபாளி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சேவல் அவர் நடித்த படங்கள். நேபாளியில் இரு வேடங்களில் வந்தார். இதில் அவரது கூர்க்கா வேடம் பேசப்பட்டது.

நயன்தாரா அதிக படங்களில் நடித்து முதலிடம் பிடித்தார். தனுசுடன் நடித்த `யாராடி நீ மோகினி' ஹிட் படமானது. `குசேலன்' படத்தில் ரஜினியுடன் வந்தார். அஜீத்தின் ஏகன், விஷாலின் சத்யம் படங்களிலும் அவர் நாயகி. சத்யம் படத்தில் அதிக கவர்ச்சி காட்டினார்.

கண்களால் பேசிய சுப்பிரமணியபுரம்

இந்த ஆண்டு ரவுண்டு கட்டி கோடிகளை வாரிச்சுருட்டிய படம் சுப்பிரமணியபுரம். சாதாரண பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட யாதார்த்த சினிமா இது. ஹீரோவாக சென்னை 28 ஜெய். 2வது ஹீரோவாக படத்தின் இயக்குனர் சசிகுமார். ஹீரோயின் புதுமுகம் சுவாதி. வில்லன் சமுத்திரகனி.

நீண்ட முடி, தாடி, பெரிய காலர் வைத்த சட்டை, பெல்பாட்டம் பேண்ட் என `80'களில் நடக்கும் கதையின் பின்புலத்தில் ரீங்கார மிடும் பாடல்கள், நகைச்சுவை உணர்வுடன் கூடிய காட்சி அமைப்புகள். சுத்தமாக ஹீரோயிசம் இல்லாத அக்மார்க் கிராமத்து காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது.

கிராமப்புறம் மட்டுமல்லாமல் அனைத்து நகர பகுதிகளிலும், கம்ப்ïட்டர் என்ஜினீயர்களையும் ரசிக்க வைத்த படம். 95 சதவீதம் புதுமுக நடிகர்களை கொண்டு ரூ. 50 லட்சத்தில் உருவாக்கப்பட்டது.

படம் வெளியான 25 நாட்களில் ரூ. 17 கோடியை வசூல் செய்து சாதனை படைத்த இந்த சுப்பிரமணியபுரம் 100 நாட்களை கடந்து ஓடி ரூ. 30 கோடியை வாரி சுருட்டியது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections