"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

அஜ்மல்-சுனேனா ஜோடியுடன் "கதிர்வேல்"


"அஞ்சாதே" படத்தில் அறிமுகமான அஜ்மல், "காதலில் விழுந்தேன்" படத்தில் அறிமுகமான சுனேனா ஆகிய இருவரும் "கதிர்வேல்" என்ற புதிய படத்தில் ஜோடி சேருகிறார்கள்.இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், வெங்கட். இவர், டைரக்டர் சரணிடம் உதவி டைரக்டராக இருந்தவர். டைரக்டர் மிஷ்கினுடன் கதை விவாதங்களில் இணைந்தவர்.மலையாள பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர், ரவீந்திரன். இவருடைய மகன் சாஜன் மாதவ், இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்.ரமேஷ்பாபு, ஒளிப்பதிவு செய்கிறார். பாப்பிலோன் கம்ïனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக்கேயன், ஜான்சன் வழங்க, செந்தில்குமார் தயாரிக்கிறார், இணை தயாரிப்பு மோனிதா. கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் கதிரேசன் என்ற பிளஸ்-2 படித்த இளைஞனை பற்றிய கதை இது. அவன் வேலை தேடி சென்னை வருகிறான். சென்னையில் அவன் சந்திக்கும் சுவாரஸ்யங்கள் பல. காதலியை சந்திக்கிறான். அவனது இலையுதிர் காலம் வசந்த காலமாகிறது. கலகல என்று போய்க்கொண்டிருந்த அவனுடைய வாழ்க்கையில், சோதனை சூறாவளி திடீர் என வீசுகிறது. அவன் எடுக்கும் ஒரு தவறான முடிவின் தாக்கம், அவனை தலைகீழாக புரட்டிப் போடுகிறது. அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான், எப்படி மீள்கிறான்? என்பதே கதை. சூழ்நிலை எப்படி அவனது வாழ்நிலையை மாற்றுகிறது? என்பது சுவாரஸ்ய திரைக்கதை.






©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections