மீண்டும் தனுஷ் - ஸ்ரேயா இணையும் 'கதிர்'! 'யாரடி நீ மோகினி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் - இயக்குனர் ஜவஹர் மீண்டும் இணைகின்றனர். இந்தக் கூட்டணி எடுக்கவுள்ள படத்தின் தலைப்பு, 'கதிர்'!யாரடி நீ மோகினியில் நடித்த நயன்தாராவையே கதிர் படத்திலும் நடிக்க வைக்கலாம் என்று தனுஷும் ஜவஹரும் கருதினர். ஆனால், இறுதியில் ஹீரோயின் வாய்ப்பு ஸ்ரேயாவுக்கே வழங்குவது என்று முடிவாகியுள்ளது. தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் ஸ்ரேயா ஏற்கெனவே ஜோடி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது, 'பொல்லாதவன்', செல்வராகவனின் 'இது மாலை நேரத்து மயக்கம்' ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார் தனுஷ். இவ்விரு படத்துக்கு பிறகு 'கதிர்' பட வேலைகள் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |