கடைசி வரைக்கும் ஹீரோயின்தான் - ரம்பா கடைசிவரைக்கும் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்றார் ரம்பா. இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘விடியும் வரை காத்திரு‘ படத்தில் நடிக்கிறேன். எனக்கும், பிரகாஷ்ராஜுக்கும் ஒரே இரவில் நடக்கும் போராட்டம்தான் கதை. தமிழில் நடிக்காவிட்டாலும் தெலுங்கு, போஜ்புரி படங்களில் பிசியாக இருந்தேன். 9 வயதில் நடிக்க ஆரம்பித்து 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். எனக்கென்று தனி பாணியை உருவாக்கி இருக்கிறேன். சினிமா என்பது என் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதனால் ஒரு போதும் பணத்துக்காக நடித்ததில்லை. பணத்தை பிரதானமாக கருதியிருந்தால் இன்று பெரும் பணக்காரி ஆகியிருப்பேன். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால்தான் இப்போதும் நான் ஹீரோயின் அந்தஸ்தோடு இருக்கிறேன். டி.வி தொடரிலோ, அம்மா, அண்ணி கேரக்டரிலோ நடிக்க மாட்டேன். சினிமாவில் இருக்கும் காலம் வரை ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன். ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |