"தீ" படத்தில் நடிகையாகவே வரும் நமீதா ![]() 'தீ' படத்தில் பொறி பறக்கும் போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி நடித்திருக்கிறார் என்றார் டைரக்டர் கிச்சா. இதுபற்றி அவர் கூறியதாவது: திரையில் இதுவரை பார்த்த சுந்தர்.சிக்கும், 'தீ' படத்தில் பார்க்கப்போகும் சுந்தர்.சிக்கும் வித்தியாசம் இருக்கும். ஒவ்வொரு படத்திலும் சுந்தர்.சியுடன் ஒரு காமெடியன் வருவார். சுந்தர் பேச வேண்டிய வசனங்களை, அவர் பேசி விட்டு போய்விடுவார். அந்த பாணி இதில் கிடையாது. முதல்முறையாக காமெடியன் துணை இல்லாமல் ஆக்ஷனில் கிளப்பி இருக்கிறார் சுந்தர். அதற்காக படத்தில் காமெடி இல்லை என்று சொல்லவில்லை. அது நிச்சயம் உண்டு. ரஜினி நடித்த 'தீ'க்கும் இப்படத்துக்கும் சம்பந்தமில்லை. அந்த டைட்டில் மட்டும்தான் இப்படத்துக்கு வைக்கப்பட்டது. அரசியல்வாதி, போலீஸ்அதிகாரி, யதார்த்த வாலிபன் என 3 கெட்டப்பில் நடித்திருக்கும் சுந்தர்.சி நேர்மை, நாணயம், துணிச்சல் என ஒட்டுமொத்த கலவையாக போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒரே ஒரு நாள் போலீஸ் ஸ்டிரைக் நடந்தால் சமுதாயம் என்னவாகும் என்பது படத்தின் ஹைலைட். நமீதா நடிகையாகவே வருகிறார். அவர்தான் சுந்தர்.சியை அரசியலுக்கு கொண்டு வருவார். ராகிணி குடும்பபாங்கான வேடத்தில் நடித்திருக்கிறார். சுவிட்சர்லாந்தில் 2 பாடல் காட்சிகள் படமாகி உள்ளது. படம் முற்றிலும் முடிந்துவிட்டது. பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இவ்வாறு கிச்சா கூறினார். ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |