"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ஹீரோக்கள் முக்கியமில்லை - ஷாஜி கைலாஷ்






ஒரு படத்தின் வெற்றிக்கு ஹீரோக்கள் முக்கியமில்லை என்று இயக்குனர் ஷாஜிகைலாஷ் கூறினார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘எல்லாம் அவன் செயல்’ படத்தை இயக்கி இருக்கிறேன். பெரிய நட்சத்திரங்களை இயக்கிய எனக்கு புதுமுகத்தை வைத்து இயக்குவதில் தயக்கம் இருந்தது. ஆனாலும் ஒரு படத்தின் வெற்றிக்கு ஹீரோக்கள் முக்கியமில்லை. கதைதான் முக்கியம் என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். நாமே அதை மீறக்கூடாது என்பதற்காகத்தான் ஆர்.கே.வை ஹீரோவாக்கி இயக்கினேன். படம் பற்றி நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. தொழில் நுட்பத்திலும் கதை உருவாக்கத்திலும் தமிழ் இயக்குனர்கள் ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். இயக்குனர்களே நடிக்க துவங்கியிருப்பதும் நல்ல முயற்சி. அடுத்து மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ‘ரெட்சில்லிஸ்’ என்ற படத்தை இயக்குகிறேன். இவ்வாறு ஷாஜி கைலாஷ் கூறினார்.









©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections