அஜீத்துடன் சமீரா ரெட்டி இணையும் "அசல்" ![]() ![]() அஜீத்தின் அடுத்த புரோஜக்ட் கன்ஃபார்ம் ஆகிவிட்டது! 'ஏகன்' படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி கோலிவுட்டையே அலைக்கழித்து வந்தது. இந்தச் சூழலில், அஜீத்தின் படத்தை சரண் இயக்குவது முடிவாகிவிட்டது.'காதல் மன்னன்', 'அமர்க்களம்' மற்றும் 'அட்டகாசம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜீத் - சரண் இணையும் இப்படத்தை சிவாஜி புரொடக் ஷன் தயாரிக்கிறது. முன்னதாக கெளதம் மேனன் இயக்குவதாக இருந்த இந்த படத்தை தரணி அல்லது விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று பலரது பெயர்களும் அடிபட்டது. இதில் மற்றொரு ஸ்பெஷல் யாதெனில், அஜீத்துடன் ஜோடி சேருபவர் சமீரா ரெட்டி என்பதே.'வாரணம் ஆயிரம்' படம் மூலம் கிடைத்துள்ள வரவேற்பு மட்டுமின்றி, நன்றாகவே நடிக்கிறார் என்ற விஷயமும் அஜீத்துடன் சமீரா இணைந்திருப்பதற்குக் காரணம். தற்போது வினய் நடிக்கும் 'மோதி விளையாடு' படத்தில் பிஸியாக இருக்கிறார், இயக்குனர் சரண். இப்படம் முடிந்த பிறகு, பிப்ரவரியில் அஜீத்தின் 'அசல்' படப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ![]() ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |