"பேஷன்" படத்துக்காக பிரியங்காவுக்கு 137 உடைகள் ![]() ![]() 'பேஷன்' இந்தி படத்தில் 137 உடைகளை அணிந்து நடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. மதூர் பண்டார்கர் இயக¢கத்தில் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனவ்த் நடித்துள்ள இந்திப் படம் 'பேஷன்'. பேஷன் உலகத்தில் நடக்கும் பயங்கர சம்பவங்களை காட்டும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. படம் குறித்து பிரியங்கா சோப்ரா கூறியதாவது: இப்படத்தில் நடிக்க மதூர் அழைத்தபோது உடனே சம்மதிக்கவில்லை. இது சர்ச்சைக்குரிய படம். மேலும் இவ்வளவு கனமான வேடத்தில் என்னால் நடிக்க முடியுமா என தயங்கினேன். மதூர் அளித்த தைரியத்தால் நடித்தேன். பஞ்சாபிலுள்ள கிராமத்திலிருந்து வரும் அப்பாவி பெண் வேடம். நடிகையாக விரும்பி, மாடலிங் உலகில் சேருகிறேன். பின் எனது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே கதை. பேஷன் சம்பந்தமான கதை என்பதால் இப்படத்துக்காக 137 உடைகளை அணிந்திருக்கிறேன். கிராமத்து பெண்ணாக வரும்போது ஒரு மேக்அப், பின் மாடலாக மாறும்போது இன்னொரு வகை மேக்அப்பில் நடித்தேன். மாடலிங் செய்திருந்தாலும் சில விஷயங்களை அறிய மாடல் துறையைச் சேர்ந்த எனது தோழிகளை சந்தித்தேன். அவர்களிடமிருந்து நிறைய தகவல்களை பெற்று இதில் நடித்தேன். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார். ![]() ![]() ©2008 All Rights Reserved No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |