"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

3 படங்கள் நஷ்டம் எல்லாம் இழந்து விட்டேன்- பார்த்திபன் வேதனை




செல்வராகவன் இயக்கும் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் நடித்து வருகிறார் பார்த்திபன். அதற்காக ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். அவர் சொல்கிறார்-ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக பேசுகின்றனர். என் கேரக்டர் பற்றி இப்போது சொல்ல மாட்டேன். அது நிச்சயம் பேசப்படும். ரொம்ப உழைப்பை கொடுத்து இப்படத்தை எடுக்கிறார் செல்வராகவன். ஒவ்வொரு பிரேமையும் கவனமாக எடுக்கிறார்."குடைக்குள் மழை", "ஹவுஸ்புல்", `இவன்' மாதிரி படங்களில் இனிமேல் நடிக்க மாட்டேன். இருந்ததை எல்லாம் அந்த படங்களில் இழந்து விட்டேன். அடுத்து நான் எடுக்கும் "வித்தகன்" படம் போலீஸ் கதை. இளைஞர்களை கவரும் விஷயங்கள் நிறைய இருக்கும்.இன்னொரு புத்தகம் எழுதிக்கொண்டு இருக்கிறேன். வாழ்க்கை அனுபவங்கள், உறவுகளின் போலித்தனம், சினிமாவில் கிடைத்தது, பறிபோனது எல்லாம் அப்புத்தகத்தில் இருக்கும். சினிமாவுக்கு அடுத்த தலைமுறையை தயார்படுத்த வேண்டும். பயிற்சி வகுப்புகள், திரைப்படவிழாக்களை நடிகர் சங்கம் முன்னின்று நடத்தவேண்டும். மற்ற மாநிலங்களில் அரசாங்கமே இது போன்ற வேலை செய்கிறது என்றார் பார்த்திபன்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections