"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

"பார்ட்டிக்கு போவதில் தப்பில்லை" - ரீமா சென்






'பார்ட்டிகளில் பங்கேற்பதில் தப்பில்லை' என்றார் ரீமா சென். அவர் கூறியதாவது:"ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு 2 வருடம் நடக்கும் என்று தெரிந்துதான் ஒப்புக்கொண்டேன். 13வது நூற்றாண்டிலிருந்து இன்றைய கால கட்டம் வரை காட்சிகள் வருகிறது. இந்தப் படத்தில் கவர்ச்சியாக நடிப்பது நிஜம்தான். ஆனால் ஆபாசமிருக்காது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதால் எங்களுக்குள் மோதல் என்று கிசுகிசு வருகிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்கள் இல்லை; அதற்காக மோதல் என்பது தவறு. இதேபோல் 'விஷாலுடன் காதல் கிசுகிசு வந்தது'. இதெல்லாம் இட்டுகட்டி சொல்வதுதான். விஷாலும், அவரது அண்ணன் விக்கியும் எனக்கு நல்ல நண்பர்கள். 'சத்யம்' படம் பண்ணியபோது, 'எனது கனவு கதாநாயகி ரீமா சென்' என்று விஷால் கூறியிருக்கிறார். அவர் தனது கருத்தை தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது. திரையுலகில் எனக்கு மிகவும் நெருங்கிய தோழிகள் ஸ்ரேயா, த்ரிஷா. நாங்கள் மூவரும் சேர்ந்து பார்ட்டிக்கு போவோம். இதில் தப்பில்லை என்றே எண்ணுகிறேன். அடுத்த ஆண்டில் நிறைய தமிழ் படங்களில் நடிக்கிறேன். இப்போதைக்கு பிரியதர்ஷன் இயக்கும் 'மாலாமால் வீக்லி-2' படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு ரீமா சென் கூறினார்.







©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections