"குஷ்புவுடன் சேர்ந்தால் சம்மன் வரும்" சத்யராஜ் கிண்டல் ![]() முரளி, விஷ்வா, எஸ்.வி.சேகர் நடிக்கும் எங்கராசி நல்லராசி படத்தின் பாடல் கேசட் வெளியிட்டு விழா பிலிம்சேம்பரில் நடந்தது. நடிகர் சத்யராஜ் பாடல் சிடியை வெளியிட நடிகை குஷ்பு பெற்றுக்கொண்டார். விழாவில் சத்யராஜ் பேசியதாவது:-சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்தால் தான் நிலைக்க முடியும். இவ்விழாவுக்கு வந்துள்ள குஷ்பு, நடிகர் சார்லி கடினமாக உழைத்தவர்கள். இதுபோல் ஜெயித்த ஜாம்பவான்கள் எல்லோரும் மெய்வருத்தி கூலி பெற்றனர். முரளி இன்னும் குழந்தை நட்சத்திரமாகவே இருக்கிறார். களத்தூர் கண்ணம்மாவை ரீமேக் செய்தால் கமல் பாத்திரத்தில் முரளியை நடிக்க வைக்கலாம்.இவ்விழாவில் குஷ்பு கால் மேல் கால் போட்டு உட்காருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவ்வாறு இருக்கவில்லை. எதிரில் குத்துவிளக்கு இல்லாதது காரணமாக இருக்கலாம். இயக்குனர் கஸ்தூரிராஜாவை குஷ்பு பக்கத்தில் பார்த்தேன். அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குஷ்பு அருகில் சென்றால் உங்களுக்கும் சாட்சி என்று சம்மன் வரும்.என் படங்களில் ஹிட்பாடல்கள் இல்லாமல் இருந்தது. உம்மா, உம்மம்மா பாட்டு அக்குறையை போக்கியது. திருமண விழாக்களுக்கு போகும் போது அந்த பாட்டை பாடித்தான் என்னை வரவேற்கின்றனர். இப்படத்தின் பாடலை பார்த்தேன். தெலுங்கு ஜுனியர் என்டி.ஆர். மாதிரி விஷ்வா சிறப்பாக நடனம் ஆடி உள்ளார்.இவ்வாறு சத்யராஜ் பேசினார். திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் பேசும்போது, திருட்டு விசிடிக்கள் மறுபடியும் தெரு தெருவாக விற்கப்படுகின்றன. அவற்றை ஒழிக்க வேண்டும் என்றார் சினிமா வினியோகஸ்தர் சங்க செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன் பேசும்போது கட்டண உயர்வால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து விட்டது என்றார்.தயாரிப்பாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.எஸ்.சீனிவாசன் அன்பாலயா பிரபாகரன், காஜாமைதீன், முரளிதரன், தேனப்பன், ஜி.ஆர்.இசையமைப்பாளர் தேவா, பிறைசூடன், நடிகர் ஜெயகோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். ![]() ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |