சினிமாவில் நடிக்க போராடினேன் -நடிகை பியா ![]() `பொய் சொல்லபோறோம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பியா. ஏகன் படத்தில் 2-வது நாயகியாக நடித்தார். சினிமாவுக்கு வந்த விதம் குறித்து அவர் கூறியதாவது:- உத்தரபிரதேசத்தில் உள்ள தாவா நான் பிறந்த ஊர். அப்பாவுக்கு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் வேலை. அம்மாவும், 2 அக்காள்களும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.எனக்கு அரசு வேலையில் விருப்பம் இல்லை. பிளஸ்-2 முடித்த பிறகு குவாலியரில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்தேன். அம்மா, அப்பாவுக்கு நான் நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. டெல்லியில் ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு வேலை பார்த்த போது பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்தேன்.ஐ.டி. கம்பெனி வேலையும் எனக்கு பிடிக்காமல் போனது. எனவே அந்த கம்பெனியில் இருந்து விலகி வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். அது பேஷன்-ஷோக்களை ஒருங்கிணைக்கும் நிறுவனம். நான் அதில் வேலைக்கு சேர்ந்தது எனது அம்மா, அப்பாவுக்கு பிடிக்கவில்லை. என்றாலும் நான் அதில் தொடர்ந்து வேலை பார்த்தேன்.அப்போது எனக்கு மாடலிங் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே விளம்பர படங்களில் நடித்தேன். அப்போது தான் டைரக்டர் விஜய் சார் என்னை பார்த்து "பொய் சொல்லபோறோம்" படத்தில் நடிக்க அழைத்தார். பேஷன்-ஷோ கம்பெனியில் வேலை பார்த்ததையே ஒத்துக் கொள்ளாத எனது பெற்றோர் நான் சினிமாவில் நடிக்க மட்டும் சம்மதிப்பார்களா? கடுமையாக எதிர்த்தார்கள். கடும் போராட்டத்திற்கு பிறகு அவர்களை சம்மதிக்க வைத்தேன் என்றார். ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |