"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ஷூட்டிங்கிற்கும் இசைக் குழுவை அழைத்துச் செல்கிறார் ஸ்ருதி






கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி, இந்தியில் 'லக்' என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தென் ஆப்ரிக்காவில் நடந்தது. அப்போது தனது இசைக் குழுவுடன் அவர் தென்ஆப்ரிக்கா சென்றார். மும்பையில் ஷூட்டிங் நடந்தாலும் அவர் தனது இசைக்குழுவுடன் செல்கிறார். இதுகுறித்து ஸ்ருதி கூறியதாவது:எனது இசைக் குழுதான் எனக்கு எல்லாமே. நான் வெளியில் எங்கே சென்றாலும் குழுவினரும் என்னுடன் வருவார்கள். சமீபத்தில் மும்பையில் பேஷன் ஷோ நடந்தது. இதில் பேஷன் டிசைனர் ரேஹன் வடிவமைத்த உடை அணிந்து நான் நடந்து வர வேண்டும் என்றனர். பேஷன் ஷோவில் இசை நிகழ்ச்சி நடத்தினால் புதுமையாக இருக்கும் எனக் கூறினேன். அதை அவர்கள் ஏற்றனர். இதனால் பேஷன் ஷோவில் முதன்முறையாக இசை நிகழ்ச்சியை எனது குழுவினர் நடத்தினர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இசைக் குழுவுடன் செல்லும் நான், ஷூட்டிங்கிற்கு மட்டும் தனியாக சென்றால் எப்படி? அதனால்தான் அவர்களையும் அழைத்துச் சென்றேன். இக்குழுவில் டிரம்ஸ் வாசிக்கும் ஜெர்ரியுடன் எனக்கு காதல் என்கிறார்கள். அதில் உண்மையில்லை. நாங்கள் நண்பர்கள்தான். இவ்வாறு ஸ்ருதி கூறினார்.








©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections