"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

அழுவது ஈஸி... காமெடி தான் கஷ்டம்-சதா






தாய்மொழியான இந்தி யில் 4 படங்களில் நடித்து வரும் சதாவின் சமீபத்திய ரிலீசான "கல்பாலி" படம் வெற்றியை கொடுத்துள்ளது. அவர் அளித்த பேட்டி.... நான் இதுவரை 20 படங்களில் நடித்து விட்டேன். தெலுங்கில் நான் நடித்த ஜெயம் படம் தான் எனது முதல் படம். நான் நடித்ததிலேயே எனக்கு பிடித்த படங்கள் என்றால் அது ஜெயம், அந்நியன்.தற்போது இந்தியில் நடித்து வருகிறேன். சமீபத் தில் வெளிவந்த கல்பாலி படம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. என்னை பொறுத்த வரை படத்தின் பட்ஜெட் சிறியதா? பெரியதா? என்றெல்லாம் பார்க்க மாட்டேன். எனது கதாபாத்திரம் எப்படி? கதை எப்படி? என்று தான் பார்ப்பேன். இந்த படம் ரொமாண்டிக்காக காமெடி படம். படப்பிடிப்பின் போது காமெடி காட்சிகளில் நடிக்க கஷ்டப்பட்டேன். அழுகை காட்சிகளில் கூட கிளிசரின் போடாமல் நடித்து விடுவேன். ஆனால் காமெடி செய்வது கஷ்டம் என்று இந்த படத்தில் நடித்த போது தான் புரிந்தது. எனது சினிமா வாழ்க்கைக்கு பெற்றோர் உறுதுணையாக இருக்கின்றனர். நான் கதை கேட்கும் போது, நடிக்கும் போது எனது தந்தை என்னுடன் உதவியாக இருக்கிறார். அந்த வகையில் எனக்கு ரொம்ப சந்தோசம். இவ்வாறு அவர் கூறினார்.










©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections