சோனியாஅகர்வால் அன்பு மாறாது-செல்வராகவன் ![]() செல்வராகவன் இயக்கும் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் ரீமாசென், ஆன்ட்ரியா என இரு நாயகிகள் நடிக்கின்றனர். ஆன்ட்ரியா ஏற்கனவே பச்சைக்கிளி, முத்துச்சரம் படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்துள்ளார்.செல்வராகவனும் ஆன்ட்ரியாவும் நெருக்கமாக பழகுவதாக கிசு கிசு பரவியது. இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. இது பற்றி செல்வராகவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-எனக்கும் ஆன்ட்ரியாவுக்கும் இசை ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்பின்போது இருவரும் இசைபற்றி நிறைய பேசுவோம் `ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஆன்டிரியா இரு பாடல்கள் பாடியுள்ளார்.இதை வைத்துக்கொண்டு எங்களை இணைத்து கிசுகிசு பரவியுள்ளது. சினிமா துறையில் பெண் தோழிகள் இருப்பது சகஜம். நான் நேர்மையாக இருக்கிறேன். எனது அடுத்த படமாக `இது மாலை நேரத்து மயக்கம்' படத்திலும் ஆன்ட்ரியா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். இதையும் கிசுகிசுவாக பரப்புகிறார்கள்."இது மாலை நேரத்து மயக்கம்" படத்தில் ஆங்கிலோ இந்தியன் கேரக்டரில் நடிக்க நடிகை தேவைப்பட்டார். ஆன்ட்ரியா அக் கேரக்டருக்கு பொரு த்தமாக இருந்ததால் தேர்வு செய்தேன். சினிமா தான் என் வாழ்க்கை. வேறு எதற்கும் அங்கு இடமில்லை.சோனியா அகர்வாலை திருமணம் செய்ததில் இருந்து இன்று வரை எங்கள் மணவாழ்க்கை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் இருவரும் தீவிரமாக காதலிக்கிறோம்.அதில் மாற்றம் இல்லை.இவ்வாறு செல்வ ராகவன் கூறினார். ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |