"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

கவர்ச்சியில் நமீதாவை பின்னுக்கு தள்ளுவேன்-நடிகை சிந்தூரி






ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நான்கு கதாநாயகி களில் ஒருவராக நடித்தவர் சிந்தூரி. தத்திதாவுது மனசு, என்னவோ புடிச்சிருக்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்தார். எஸ்.ஜே. சூர்யாவின் கள்வனின் காதலி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்தார்.பின்னர் தெலுங்குக்கு போன அவர் தமிழ் திரையுலகில் மீண்டும் ரவுண்ட் கட்ட திரும்பி வந்துள்ளார். அவர் சொல்கிறார்.தமிழில் நல்ல பாத்திரங்கள் அமையாததால் தெலுங்குக்கு போனேன். அங்கு நான் நடித்த குண்டம்மா காரி மனவாடு சூப்பர் ஹீட்டாக ஓடியது. பிறகு நல்ல படங்கள் அமையவில்லை. தமிழில் கிளாமராக நடிக்க வாய்ப்புகள் வந்தன. காத்திருந்தது போதும் என்று நடிக்க வந்து விட்டேன். எந்த மாதிரி வேடத்தில் நடிக்க அழைத்தாலும் நடிப்பேன். எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. கிடைக்கிற கேரக்டரில் நடிப்பது தான் சரியானது. கிளாமராக இனி நடிப்பேன். சினிமாவை பற்றி இப்போது தான் புரிந்து கொண்டேன். கிளாமராக நடிப்பது என்று வந்த பிறகு அப்படி நடிக்க மாட்டேன் இப்படி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். படத்துக்கு எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு கிளாமராக நடிப்பேன். நமீதாதான் அதிக கவர்ச்சி காட்டுகிறார். அவரை அதிக கவர்ச்சி காட்டி பின்னுக்கு தள்ளுவேன்.பாய்ஸ் படத்தில் என்னோடு நடித்தவர்கள் உயர்ந்து விட்டார்கள். திறமை கடின உழைப்பு மூலம் வந்துள்ளனர். நடிப்பு நடனம் எனக்கு தெரியும். ஒரு பாட்டுக்கு ஆடுவேன் என்றார்.








©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections