"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

முத்தக் காட்சிகள் தேவை இல்லை: நடிகை தமண்ணா எதிர்ப்பு




திரைப்படங்களில் சமீப காலமாக முத்தக்காட்சிகள் அதிகரித்து வருகின்றன. எம்.ஜி.ஆர்., சிவாஜி கால படங்களில் முத்தக்காட்சிகள் அனுமதிக்கப்படவில்லை. கமலஹாசன், தாராளமாக இதை புகுத்தினார். அவரது பெரும்பாலான படங்களில் முத்தக்காட்சிகள் இடம் பெற்றன.தற்போது முத்தக் காட்சிகள் இல்லாத படங்கள் குறைவுதான் என்கிற அளவுக்கு மெஜாரிட்டி படங்களில் முத்தக்காட்சிகள் வைக்கப்படுகின்றன. கதாநாயகிகள் மார்க்கெட்டை தக்க வைக்க முத்தக் காட்சிக்கு சம்மதிக் கிறார்கள். புது முக நடிகைகள் வாய்ப்புகள் பிடிக்க முத்தத்தில் தராளம் காட்டுகிறார்கள்.இந்த போக்குக்கு நடிகை தமண்ணா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கல்லூரி படத்தில் நடித்தவர் தற்போது சூர்யா ஜோடியாக `அயன்' படத்திலும் தனுஷ் ஜோடியாக படிக்காதவன் படத்திலும் நடித்து வருகிறார். அவர் சொல்கிறார்.முத்தக் காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்னை அணுகும் தயாரிப்பாளர்களிடம் இதை கறாராக சொல்லி விடுகிறேன். ஒப்பந்தத்திலும் அது மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டு விடுகிறேன்.ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. முத்தக்காட்சிகள் படத்தின் வெற்றிக்கு பயன்படாது. முத்தம் என்பது ஒரு உணர்ச்சியின்வெளிப்பாடு அவ்வளவுதான்.நடிகைகளுக்கு அவர்கள் மார்க்கெட்டுக்கு தக்கபடி சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது எனக்கும் தகுதி வரும் போது நிறைய சம்பளம் வாங்குவேன். இவ்வாறு தமண்ணா கூறினார்.






©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections