ஆற்றில் குளித்த நடிகையை நீர்நாய் விரட்டியது வி.பி.பிலிம்ஸ் சார்பில் வி.பழனிவேல் தயாரித்து வரும் படம் ‘கந்தா’. கரண், புதுமுகம் மித்ரா நடிக்கிறார்கள். பாபு.கே.விசுவநாத் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. கோலாலம்பூர் அருகே உள்ள புத்தர்கயா என்ற இடத்தில் ஓடும் பெரிய நதியில் கரணும், மித்ராவும் குளித்துக் கொண்டே விளையாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதன் ஒத்திகைக்காக மித்ரா ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். கேமராமேன், இயக்குனர்கள் கரையில் நின்று கேமரா கோணம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தூரத்தில் ஏதோ ஒரு உருவம் மித்ராவை நோக்கி வருவதை கேமராமேன் பார்த்தார். உடனே கரையேறுமாறு மித்ராவுக்கு குரல் கொடுத்தார். ஆனால் மித்ரா அதை கவனிக்க வில்லை. அருகில் வந்த பிறகுதான் அது நீர்நாய் என்பது தெரியவந்தது. அதை கண்ட மித்ரா அலறிதுடித்தபடி கரைக்கு ஓடி வந்தார். அப்போது பெரிய கூழாங்கல்லில் கால் சிக்கி உருண்டதில் அவரின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு மித்ராவை மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து காட்சியை வேறு இடங்களில் படமாக்கினர். ![]() ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |