"கனவு தொழிற்சாலை"- தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ஒரு பாடலுக்கு ஆடினால் தப்பா?-மீனாட்சி




கருப்பசாமி குத்தகைதாரர் படம் மூலம் தமிழில் அறிமுக மானவர் மீனாட்சி. தற்போது சில படங்களில் நடித்து வரும் இவர் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அடுத்ததாக விஷாலுடன் தோரணை படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் `நான் படவாய்ப்புகள் ஒன்றும் இல்லாததால் ஒரு பாடலுக்கு ஆட வர வில்லை. தற்போது ராஜாதிராஜா, டாக்சி நம்பர் 4777, பள்ளி கொண்டபுரம், பெருமாள் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.நடனமாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது விருப்பத்திற்காகவே ஒரு பாடலுக்கு ஆடுகிறேன். சிம்புவுடன் குத்து பாடலுக்கு ஆடினேன். சிம்புவுடன் நடனமாடும் போது எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. எனக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆடுவேன் என்றார்.






©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections