"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

நடிகர் விக்னேஷ் - உடன் ஓர் நேர்காணல்


"சின்னத்தாய்" படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். முதல் படமே 105 நாட்கள் ஓடி வசூலைக் குவித்தது. அடுத்து, "கிழக்கு சீமையிலே"(பாரதிராஜா), "ராமன் அப்துல்லா" (பாலுமகேந்திரா), "காலம் மாறியாச்சு" (வி.சேகர் ), "பசும்பொன்" போனற வெற்றிபடங்களிலும் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் "குடியரசு". இதில் இவர் பத்திரிகை நிருபராக நடித்துள்ளார்.புதிய இயக்குநர் "பால கணேஷ்" இயக்கத்தில் வளர்ந்து வரும் "ஈசா". இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.உப்பளத்தில் வேலை செய்யும் வாலிபனாக நடித்திருக்கும் விக்னேஷ் - ற்க்கு இப்படம் மிக பெரிய அளவில் பேசப்படும் என்ற எதிர்பர்பை ஏற்படுத்தியுள்ள்து.

இனி இவருடன் நேர்காணல். . . . . . . .



உங்கள் இளமைக் கால அனுபவம் பற்றி?. .

நான் பிறந்த ஊர் ஈரோடு மாவட்டம் மூலனூர்.என் பாட்டி (அப்பாவின் அம்மா) தான் என்னை வளர்த்தார்கள் .எனக்கு ஒன்றரை வயதாக இருக்கும் போதே ஹைதாராபாத்தில் வேலையில் இருந்த என் பெற்றோர், பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டனர்.



விஜய் டி.வி. -யி்ல் "கதையல்ல நிஜம்" (நடிகை லட்சுமி நடத்திய) நிகழ்ச்சியி்ல் கலந்து கொணடு இந்த துயர சம்பவத்தைவிவரித்தீர்கள் அல்லவா?.

ஆமாம். அப்பா,அம்மா, பாசம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தேன். பள்ளியில் ஏற்றத்தாழ்வினால் மிகவும் காயப்பட்டேன்.அப்போதே வாழ்க்கையில் நாம் எப்பாடுபட்டாவது முன்னேற வேணடும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

சினிமாவில் சேர வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?

கடினமாக உழைத்து நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்றவர்கள் உயர்ந்ததையும் கமலஹசன் சார்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்டி என்னை ஊக்கப்படுத்தியது.நடிகர் சிவக்குமார் எங்கள் பகுதியை சேர்ந்தவர்தான். நாமும் முன்னேறலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுதியது.பின்ணனி பாடகர் தாராபுரம் சுந்தர்ராஜன், நடிகர் நாகேஷ் ஆகியோரும் எங்கள மாவட்டத்திலிருந்து வந்து கொடி கட்டி பறந்தது எனக்கு உற்சாகத்தை அளித்தது.



முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

சினிமாத்துறையில் பலரிடம் உதவியாளராக பணிபுரிந்தேன். கொடுத்த வேலையை ஒழுங்காகவும் ஈடுபாட்டுடனும் செய்து நல்ல பெயரெடுத்தது. எனக்கு முதல் படத்திலேயே கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது.முதல் படம் 105 நாட்கள் ஓடிய்தும் மற்ற பட வாயப்புகள் கிடைக்க காரணமாக இருந்தன.

புதியதாக நடிக்க வரும் இளைஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

விடாமல் முயற்சி செய்யுங்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்.வெற்றி நிச்சயம்.


நேர்காணல் ; எஸ்எஸ்ஸார்.சுகுமார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections