'வெண்ணிலா கபடிகுழு' பாடல் வெளியீடு ![]() இமேஜின் கிரியேஷன்ஸ் சார்பில் ஆனந்த் சக்ரவர்த்தி தயாரிக்கும் படம் 'வெண்ணிலா கபடி குழு'. சுசீந்திரன் இயக்கியுள்ளார். செல்வ கணேஷ் இசை. இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் தலைமை தாங்கினார். விழாவில் இயக்குனர் கவுதம்மேனன் பேசும்போது, 'சினிமாவில் நடிகராவது ரொம்ப ஈஸி. திறமை, இருந்தால் போதும். அதுபோல் ஸ்கிரிப்டும், திறமையும் இருந்தால் இயக்குனராகி விடலாம். ஆனால் தயாரிப்பாளர் ஆவது ரொம்ப கடினம். பணம் இருந்தாலும், படம் தயாரிக்கும் எண்ணம் வர வேண்டும்’ என்றார். விக்ரம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, டைரக்டர் எழில், ஒளிப்பதிவாளர்கள் அல்போன்ஸ்ராய், லக்ஷ்மன்குமார், படத்தின் ஹீரோ விஷ்ணு, கடம் வித்வான் விநாயக் ராம் உட்பட பலர் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரத்தில் இன்றும் இயங்கிவரும் வெண்ணிலா கபடி குழுவின் உண்மை சம்பவமே இப்படத்தின் கதை. இதையட்டி தமிழ்நாடு முழுவதுமிருந்தும் வந்திருந்த 500 கபடி வீரர், வீராங்கனைகள் விழாவில் கலந்துகொண்டனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |