"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

பிபாஷா கோபத்தால் வித்யா வெளியே ஜெனிலியா உள்ளே




ஜான் ஆப்ரஹாமுக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கக்கூடாது என பிபாஷா கண்டிஷன் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தி சினிமாவில் தங்களது நட்சத்திர காதலர்கள் யாருடன் நடிக்க வேண்டும், யாருடன் நடிக்கக்கூடாது என்பதையும் நடிகர், நடிகைகள்தான் முடிவு செய்கிறார்கள். தீபிகா படுகோனேவுடன் ஒரு படத்துக்கு மேல் நடிக்கக்கூடாது என சைப் அலிகானுக்கு அவரது காதலியும் நடிகையுமான கரீனா கபூர் உத்தரவிட்டார். ஜான் ஆப்ரஹாம், ஷாஹித் கபூர் ஆகியோருடன் நடிக்கக் கூடாது என கேத்ரினாவிடம் சல்மான் கான் கூறினார். இதனால் இரு படங்களை அவர் மறுத்தார். இப்போது ஜான் ஆப்ரஹாமுக்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. டேவிட் தவன் இயக்கத்தில் ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் படம் 'ஹ¨க் யா க்ரூக்'. இதில் அவரது ஜோடியாக நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமானார். ஏற்கெனவே இருவரும் சேர்ந்து 'சலாமே இஷ்க்' படத்தில் நடித்தபோது நெருக்கமாக பழகியதாக செய்திகள் வெளியானது. இதனால் வித்யா பாலனுடன் நடிக்கக்கூடாது என ஜானிடம் அவரது காதலி பிபாஷா பாசு வற்புறுத்தினார். இதையடுத்து இப்படத்திலிருந்து வித்யா பாலன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜெனிலியா நடிக்கிறார். இதுகுறித்து இப்பட இயக்குனர் டேவிட் தவன் கூறுகையில், ''ஆமிர் கானின் 'ஜானே து யா ஜானே நா' படத்தில் ஜெனிலியாவின் நடிப்பு பிடித்திருந்தது. அதனால் அவரை ஒப்பந்தம் செய்தேன். வித்யா பாலன் நீக்கம் பற்றி கருத்து கூற விரும்பவில்லை'' என்றார்.





©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections