துணுக்கு தோரணங்கள் ![]() நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் சிம்புவுடன் 'சிலம்பாட்டம்', விஷாலுடன் தோரணை' படங்களில் ஒரு பாட்டுக்கு கிளு கிளு குத்தாட்டம் இடுகிறார், 'கருப்பசாமி குத்தகைதாரர்' நடிகை மீனாட்சி. 'பச்சைக்கிளி முத்துச்சரம்' நடிகையுடன் நெருக்கமாக பழகும் செல்வம் நிறைந்த ராகவ இயக்குனரை கண்டித்திருக்கிறாராம் அவர் மீது காதல் கொண்டு கல்யாணம் செய்து கொண்ட முன்னாள் நடிகை. வயதான கேரக்டர்களில் வரும் வாய்ப்புகளை தவிர்ப்பதற்கு வாயைப் பிளக்கச் செய்யும் சம்பளத்தைக் கேட்கிறாராம் சிம்ரன். ![]() ![]() ![]() ஜேம்ஸ் பாண்ட் ஹீரோவை விட ரஜினிகாந்துடன் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்று பாலிவுட் குயின் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். மணிரத்னம் படத்தில் நடிப்பதால் ரஜினியின் எந்திரன் படத்துக்கான பாடல் காட்சிக்கு கொடுத்திருந்த கால்ஷீட் தேதியை மாற்றி அல்வா தந்தார் ஐஸ்வர்யா ராய். தீபா மேத்தாவின் 'கோமடா மாரு' படத்தில் அக் ஷே குமாருக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா இந்தியில் அசினை முந்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். கேரளாவில் வீடு கட்டி வரும் 'காதல்' சந்தியா தமிழுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதாக கூறியிருக்கிறார். தனது படத்துக்கு நடிகை கேத்ரீனா கைஃபையே ஹீரோயினாக போடுங்கள் என்று நடிகர் அக்ஷே குமார் கேட்டுகொள்வதால், சல்மான் தரப்பில் இருந்து புகை கிளம்பவுள்ளதாம். பாலிவுட்டின் சம்மிர் டட்டானியுடன் ஒரு பார்ட்டியில் நடிகை ஸ்ரேயா மிக நெருக்கமாக இருந்துள்ளதால் அவர்களது நட்பு உறுதியாகியுள்ளது. ![]() ![]() தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் முத்தக் காட்சியில் நடிப்பதை பெரிதாக எடுத்தக்கொள்ள மாட்டேன் என்கிறார் ஐஸ்வர்யா ராய். சென்சாரில் 'ஏ' சர்டிஃபிகெட் வாங்கியுள்ள வேலு பிரபாகரனின் 'காதல் அரங்கம்' படத்தில் நடிகை ஷெர்லி தாஸ் ஒரு காட்சியில் டாப்லெஸ் ஆக நடித்திருப்பதே ஹைலைட். தொடர்ந்து படங்கள் சரியாக ஓடாததால் கொஞ்சம் பிரஷ்ஷாக இருப்பதற்கு ஒரு மாதம் துபாய் டிரிப் அடித்திருக்கிறார் நயன்தாரா கரணுடன் 'கந்தா' படத்தில் நடிக்கும் மலையாள வரவு மித்ரா சரியாக நடனமாடாததால் இயக்குனரிடம் திட்டு வாங்கி தேம்பித் தேம்பி அழுதுள்ளார். படத்தின் கதைக்கு தேவை என்றால் லெஸ்பியனாக நடிக்க உடனே தயாராக இருப்பதாக சொல்லியிருக்கிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. விரைவில் சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டு திருமண வாழ்க்கையில் ஈடுபட நடிகை த்ரிஷா முடிவெடுத்துள்ளதாக கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ளது. ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |