லட்சுமிராயை பார்க்க 4 முறை சென்னை வந்தார் டோனி ![]() கடந்த இரண்டு மாதங்களில் நான்கு முறை நடிகை லட்சுமி ராயை பார்க்க சென்னைக்கு டோனி வந்ததாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'ட்வென்டி 20' கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் நடந்தது. சென்னையில் இப்போட்டிகள் நடந்தபோது, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியை லட்சுமிராய் சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோதெல்லாம் இருவரும் சேர்ந்து வெளியிடங்களுக்கு சென்று வந்தனர். டோனி-லட்சுமி ராய் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவியது. இதை லட்சுமி ராய் மறுத்தார். இதற்கிடையே கடந்த இரு மாதங்களில் நான்கு முறை டோனி சென்னை வந்ததாகவும் லட்சுமி ராயை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'தனது பெற்றோரிடம் பெங்களூருக்கு முக்கிய வேலை விஷயமாக செல்வதாகக் கூறி டோனி சென்ற¤ருக்கிறார். ஆனால் அவர் பெங்களூருக்கு செல்லாமல் சென்னை வந்து லட்சுமி ராயை சந்தித்திருக்கிறார்' என மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நேற்று நடந்து முடிந்தது. அப்போதும் டோனி தங்கியிருந்து ஓட்டலுக்கு லட்சுமி ராய் சென்றார். இருவரும் சேர்ந்து வெளியே சில இடங்களுக்கும் சென்று வந்தனர். லட்சுமியுடனான உறவு பற்றி டோனி இதுவரை மவுனம் காத்து வருகிறார். இது தொடர்பான கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுப்பது குறிப்பிடத்தக்கது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |