"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

சில்க் ஸ்மிதாவின் கதை படமாகிறது






1980-களில் தமிழ் சினிமாவை தனது கவர்ச்சி நடிப்பால் ஆட்டிப்படைத்தவர் சில்க் ஸ்மிதா. இவரது சொந்த வாழ்க்கை துயரம் நிறைந்ததாக இருந்தது. 1996-ல் இவர் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை கொண்டு தமிழ், இந்தியில் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் இந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர். இவர் இந்தி நடிகர் ஜிதேந்திராவின் மகள். பல்வேறு படங்கள், டிவி தொடர்களை தயாரித்து வருகிறார். 'இப்படம் குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. பட உருவாக்கம் குறித்து ஆலோசனை மட்டுமே செய்துள்ளோம்' என¢றார் ஏக்தா கபூர். இப்படத்தில் சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இயக்குனர் மற்ற டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. 'மூன்றாம் பிறை' படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டபோது சில்க் ஸ்மிதா மும்பையில் பிரபலம் ஆனார். சில இந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.











©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections