"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தூண்டில் படத்துக்கு ரஜினி மகள் சவுந்தர்யா கிராபிக்ஸ்


ரஜினி மகள் சவுந்தர்யா கிராபிக்ஸ், கார்ட்டூன், சிறப்பு சப்தம் அமைத்தல் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அபிராமபுரத்தில் இதற்கென்று பிரத்யேக ஸ்டூடியோ நிறுவியுள்ளார். இங்கு பலர் வேலை பார்க்கின்றனர். ரஜினியின் சூல்தான், அனிமேஷன் படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதற்காக ரஜினி ரஷியா சென்று படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சீனையும் சவுந்தர்யா கிராபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எப்பெக்ட்சில் கவனமாக வடிவமைத்து வருகிறார். அன்பே ஆருயிரே, படத்துக்கு ஏற்கனவே கிராபிக்ஸ் சிறப்பு ஒலி சத்தம் பணிகள் செய்து கொடுத்திருந்தார். எனவே அவரிடம் இப்பணிகளுக்காக மேலும் படங்கள் குவிகிறது. ஷாம், திவ்யா நடிக்கும் தூண்டில் படத்துக்கு கிராபிக்ஸ் செய்ய வாய்ப்பு வந்துள்ளது. இதற்கான வேலையில் சவுந்தர்யா ஈடுபட்டுள்ளார். தூண்டில் படத்தில் சந்தியாவும் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார். கே.எஸ். அதியமான் இயக்கியுள்ளார்.












©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections