"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

கல்கி பகவானின் ஆசிரமத்தில் பாலிவுட் நாயகிகள்


சென்னை அடுத்துள்ள சத்தியவேடு அருகே வரதய்ய பாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோல்டன் சிட்டி யுனிவர்சிட்டியில் கடந்த சில தினங்களாக பாலிவுட் நடிகைகளான ஷில்பா ஷெட்டி, மனிஷா கொய்ராலா ஆகிய இருவரும் குடும்பத்தினருடன் தங்கியிருந்து யோகா பயிற்சி பெற்றதாக தெரியவருகிறது. கல்கி பகவான் ஆசிரமம் அமைந்துள்ள இங்கு, ஷில்பா ஷெட்டி தனது தாய், தங்கை ஷமிதா ஷெட்டி மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் தங்கியிருந்தார். மனிஷா கொய்ராலா தனது தந்தை கிரிஜா கொய்ராலாவுடன் வந்திருந்து கோல்டன் சிட்டி கட்டடத்தை சுற்றிப் பார்த்தப் பின் பகவானை சந்தித்து ஆசி பெற்றனர். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இவர்கள் ஆசிரமத்திற்கு வந்து செல்வதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.















©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections