"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

"மேகம்" - திரைப்படம் விமர்சனம்


விபத்தில் கண்பார்வை குறையும் மனைவியை தனது பீச் ஹவுசில் ஓய்வெடுக்க வைக்கிறார் டாக்டர் வேணு அரவிந்த். டாக்டர் வெளியூர் சென்ற நேரத்தில், ‘நான் மெக்கானிக். தன் மனைவிக்கு வைத்தியம் பார்க்க டாக்டரை பார்க்க வந்ததேன்’ என்று கூறி கெஸ்ட் அவுசுக்குள் நுழைகிறார் ஹீரோ தமிழரசன். உதவி செய்வதுபோல் நடித்து அங்கேயே தங்குகிறார்.


ஆனால், அவரே திட்டம் போட்டு டாக்டர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ படம் எடுக்கிறார். ‘அடப்பாவி நல்லவன் மாதிரி நடிச்சு, என் வாழ்க்கையை நாசமாக்கிட்டியே’ என்று அவர் புலம்பும்போது, விரிகிறது தமிழரசனின் பிளாஷ் பேக். எதற்காக அப்படி செய்தார் என்பது மீதிக் கதை. நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த நீச்சல் குள விபத்து, பரபரப்பை ஏற்படுத்திய செக்ஸ் டாக்டர் ஒருவரின் கதை, இரண்டையும் இணைத்து ஒரு திகில் படம் தர முயற்சித்திருக்கிறார்கள்.


அப்பாவி போல கெஸ்ட் அவுசுக்குள் நுழைந்து பிறகு பழிவாங்கும் படலத்தை தொடங்கும் தமிழரசனை விட, மெக்கானிக் தமிழரசன் பரவாயில்லை. மனைவிக்கு இருதய நோய் என்று தெரிந்து துடிப்பதும், அவரை காப்பாற்ற போராடுவதும் நெகிழ வைக்கிறது. டாக்டரின் மனைவி சரிதா யாதவ் கவர்ச்சி மழையும் தமிழரசன் காதலி ராகிராஜி கண்ணீர் மழையும் பொழிகிறார்கள். நல்ல டாக்டராக அறிமுகமாகி வில்லனாக மாறும் வேணு அரவிந்த் நிறைவாக செய்திருக்கிறார்.


மெக்கானிக் நண்பர்களின் காமெடியில் இரட்டை அர்த்தம் பொங்கி வழிகிறது. இடையில் வரும் ஒரு காதல் ஜோடி பிலிம் ரோலை சாப்பிட்டுவிட்டு போகிறார்கள். ஒளிப்பதிவாளர் செல்வகணேஷ், இசை அமைப்பாளர் ரவிபிரியன், இயக்குனர் ஜீவரத்தினம் மூவரும் இன்னும் ஈடுபாட்டோடு இருந்திருந்தால் நல்ல திகில் படம் கிடைத்திருக்கும்.












©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections