"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ஸ்ரீசாந்துடன் ஸ்ரேயா காதல்


கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை ஸ்ரேயா காதலிப்பதாக இந்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் மும்பையில் பேஷன் வீக் பார்ட்டி ஒன்று நடந்தது. அங்கு ஸ்ரீசாந்த் வந்திருந்தார். பார்ட்டியில் இருந்த ஸ்ரேயா, ஸ்ரீசாந்தை பார்த்ததும் அவர் அருகே சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இது பற்றி பார்ட்டியில் பங்கேற்ற ஸ்ரீசாந்தின் நண்பர் கூறுகையில், 'ஸ்ரீசாந்தை கவரும் விதத்தில் ஸ்ரேயா நடந்துகொண்டார். அவருக்கு பிடித்த உணவை வரவழைத்தார். அவருடன் சேர்ந்தே உணவு அருந்தினார். பின் இன்னொரு பார்ட்டிக்கும் அங்கிருந்து ஸ்ரீசாந்தை அவர் அழைத்துச் சென்றார்' என்றார். 'பார்ட்டி முடிந்து வீட்டுக்கு சென்றதும் பலமுறை ஸ்ரீசாந்துடன் மொபைலில் பேசினார் ஸ்ரேயா. மறுநாளும் ரெஸ்ட்டாரன்டில் சந்திக்க ஸ்ரேயா நேரம் கேட்டிருந்தார். ஆனால் வேறு வேலை காரணமாக வரமுடியாது என ஸ்ரீசாந்த் கூறிவிட்டார்' என ஸ்ரீசாந்த்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.








©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections