போட்டியை சமாளிக்க கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி, ஓவியா
சென்னை, ஏப்.7-
அஞ்சலியும், ஓவியாவும் கவர்ச்சிக்கு மாறியுள்ளனர்.
சக நடிகைகள் போட்டியை சமாளிக்கவே அவர்கள் ஆடை குறைப்புக்கு சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓவியா 'களவானி' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். கமலுடன் 'மன்மதன் அம்பு' படத்தில் சிறு வேடத்தில் வந்தார்.
'மெரினா' படத்திலும் நடித்தார். அனைத்தும் மார்டனாகவும் குடும்ப பாங்கான கேரக்டருமாகவும் இருந்தன.
தற்போது 'மசாலா கபே', 'சிலு சிலுனு ஒரு சந்திப்பு', 'சிவன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'மசாலா கேப்' படத்தில் மட்டும் படு கிளாமராக நடிக்கிறார். இப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இதே படத்தில் அஞ்சலியும் கவர்ச்சி வேடத்தில் நடிக்கிறார்.
அஞ்சலியும் இதற்கு முன் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து வந்தார். இருவரும் இந்த அளவு கவர்ச்சிக்கு இறங்கி இருப்பது திரையுலகினரை பரபரக்க வைத்துள்ளது. அடுத்து நீச்சல் உடையிலும் நடிப்பார்கள் என்று தெரிகிறது.
தமன்னாவுக்கு தெலுங்கில் ராச்சா, ரிபெல் என இரு படங்கள் கைவசம் உள்ளன. தமிழில் கடைசியாக நடித்த படம் வேங்கை. அதன் பிறகு தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லை.
மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இந்தியிலும் வாய்ப்பு தேடுகிறார். தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-
வாழ்க்கையில் ஜெயிக்க நிறைய கனவு காண வேண்டும். வெற்றி பெறுவோம் என்றும் நம்ப வேண்டும்.
எல்லாவற்றுக்கும் ஆசைப்பட வேண்டும். ஆனால் பேராசை மட்டும் கூடவே கூடாது. பேராசை கேடு செய்யும். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்றும் ஆர்வப்படுகிறேன்.
அதற்காக நம்பர் ஒன் இடத்துக்கு வரவேண்டும் என்றெல்லாம் ஆசை கிடையாது.
தமிழ், தெலுங்கில் நிறைய படங்கள் நடித்து விட்டேன். வெற்றியும் தோல்வியும் கிடைத்து விட்டது. இப்போது சினிமாவில் நிறைய பக்குவப்பட்டு விட்டேன். இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.